தவெக சார்பில் இன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதாக கூறி இந்த ஆர்ப்பார்ட்டம் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ”எம்.ஜி.ஆர்-க்கு பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வரவேண்டுமென ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், திமுக அவருக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் செய்தது. திமுகவை எதிர்த்து நிற்கும் மனவலிமை விஜய்க்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் மிரட்ட முடியாத, விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்” என்று பேசினார்.
தமிழ் நாட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என மிகவும் எதிர்ப்பார்க்கபப்பட்டது. ரஜினியும் அவ்வப்போது தன்னுடைய படங்களில் அரசியல் வசனங்களை பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர் அரசியலில் இறங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் திமுகவின் மிரட்டலால் தான் ரஜினிகாந்தால் அரசியலுக்கு வரமுடியாமல் போனதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.







