மாணவர்கள், போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் சுற்றறிக்கை வாபஸ்!

அரசு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடை செய்யக்கூடிய அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் நேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கைக்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், அரசு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப்பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.