சென்னை கே கே நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ் வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் சிலர் பெரிய கற்களால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை ஹைதரபாத்தில் இருந்து சி.சி.டி.வி மூலம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வங்கியின் அதிகாரிகள் சென்னை கே.கே நகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ரோந்து போலீசார் ஏ.டி.எம் மையம் அருகே வந்த போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கற்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-கா. ரூபி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: