தென்காசியில் கந்து வட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கந்து வட்டி கேட்டு, நான்கு பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த நபரை அடித்து துன்புறுத்தியுள்ளது. இந்த காட்சிகள் உடையம்புளி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதையும் படியுங்கள் : வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில், ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலார்குளத்தை சேர்ந்த நந்தகுமார், முஜித்குமார், ஆறுமுகம், மருதம்புத்தூரை சேர்ந்த பத்திரகாளி ஆகியோரை கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
– ரூபி







