ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – கடலூரில் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பங்கேற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர், மேடை ஏறுவதற்கு முன்பாக மயங்கி கீழே விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைது

இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடலூர் போலீசார், ஹரிஹரன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.