வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவித்த, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டால், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளியில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு தற்காலிக ஆக்ஸிஜன் வசதி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்தார். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க, இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ககன் தீப் சிங் பேடி, அவர்கள் நாளை முதல் பணியை தொடங்குவார்கள் என தெரித்தார்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.