முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா: புதிதாக 20,421 பேருக்கு தொற்று!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 ஆயிரத்து 421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 33 ஆயிரத்து 161 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 65 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். 4446 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 832 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும் திருவள்ளூரில் 487 பேருக்கும் திருச்சியில் 590 பேருக்கும் கோவையில் 2645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

எல்.ரேணுகாதேவி

85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வடமாநில இளைஞர்

Gayathri Venkatesan