முக்கியச் செய்திகள் சினிமா

மீண்டும் படம் இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிருத்திகா உதயநிதி மீண்டும் படம் இயக்குகிறார்.

சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் நடித்த, வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி ஆகிய படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இந்தப் படங்களை அடுத்து சில காலம் படம் இயக்காமல் இருந்த கிருத்திகா இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்ட்மென்ட் என்ற நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் இணைய இருப்பதில் மகிழ்ச்சி என்று காளிதாஸும் தான்யாவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

கீழடியில் மூடியுடன் கண்டெடுக்கப்பட்ட மண்பானை!

Jeba

சசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

Nandhakumar

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!