சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44) சென்னை வால் டாக்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் இவர் சொந்த ஊர் செல்ல சென்னை கோயம்பே டு பேருந்து நிலையம் முன்பு காத்து கொண்டிருந்த போது அங்கு வந்த நான்கு நபர்கள் செல்வராஜுடம் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டதற்கு, செல்வராஜ் பணம் தர மறுக்கவே 4 நபர்களும் அவரை கத்தியால் வெட்டி மற்றும் கையால் தாக்கி அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேற்படி சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாா் சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்த போது குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கோயம்பேடு பல்லாவரம் பகுதிகளை சேர்ந்த விஜயகுமார் என்ற வெள்ளை விஜி(43) , கோபிகிருஷ்ணன்(52) , வேல்ராஜ் என்கிற சொறி(40) மற்றும் சதீஷ்குமார்(38) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரிடமிருந்து 2000 பணம் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
—ரூபி.காமராஜ்







