டீ குடிக்க விடாமல் தடுக்கும் வித்தியாசமான உடை – என்னடா இது உர்ஃபி ஜாவேத்துக்கு வந்த சோதனை…!

தான் அணிந்திருக்கும் உடையால் டீ குடிக்க சிரமப்படும் உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில்…

தான் அணிந்திருக்கும் உடையால் டீ குடிக்க சிரமப்படும் உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட இவர், வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்தவாறு புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இதனால் பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வருகிறார்.

இந்நிலையில், உர்ஃபி ஜாவேத் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் அணிந்திருக்கும் உடையால் டீ குடிப்பதற்கு ஏற்படும் சிரமத்தை உர்ஃபி ஜாவேத் வெளிப்படுத்தியுள்ளார். பெரிய தடுப்பு அமைக்கப்பட்டிருப்பது போன்ற உடையை அணிந்துள்ள உர்ஃபி ஜாவேத், வழக்கமான முறையில் டீ குடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்.

பின்னர் அதே உடையில் டீ குடிப்பதற்கான வழியையும் அவர் கண்டுபிடித்தார். சற்று வலப்புறம் முகத்தை திருப்பிய ஜாவேத், கையில் வைத்திருந்த டீயை குடித்து மகிழ்ச்சி அடைந்தார். ’டீ மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது’ என்ற குறிப்புடன் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 80,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.