முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவை மக்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

திமுக அரசு கோவை மக்களை புறக்கணிக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. கோவை செங்குளத்தில் நீர் நிறையும்
போது இது போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் பிரச்னைகள் வரும். ஆனால் அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதை ரத்து செய்து விட்டார்கள். நிறைய லாரிகளில் ரெட்மிக்ஸ் கொண்டு வந்து சாலைகளை சரி செய்ய வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து ஆட்சியர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு தகவல்
தெரிவித்தும் இங்கு வரவில்லை. காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. மழை வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதிகாரிகள் தயவு செய்து வேலை செய்ய வேண்டும்.

டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது.  சென்னையில் நான் அமைச்சராக இருந்த போது செய்த பணிகளுக்கு பின்பு, இது வரை எந்த பணிகளும் நடக்கவில்லை.

2011ஆம் ஆண்டுக்கு பின் திருச்சி, பாலக்காடு சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும்
போடப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற பாலத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்ட பின்னர், இப்போது மாநகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே சாலை பணிகளை விரைவில் துவங்க வேண்டும். இந்த சாலைகள் ஒரு வாரத்தில் போடப்பட வேண்டும். இல்லை எனில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

மக்கள் எங்கே திமுகவை பாராட்டுகின்றனர் என தெரியவில்லை. யாருக்கும் திமுக அரசு நல்லது செய்யவில்லை. சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. நன்றாக கூட மழை பெய்யவில்லை. இந்த அரசு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், வேலையை செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தொலைக்காட்சியில் நடிக்காமல், வேலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 வரை ரத்து: ஆர்.கே.செல்வமணி!

Halley Karthik

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

Jayakarthi

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

Arivazhagan Chinnasamy