வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.   நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில்…

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், காமெடி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில், வடிவேலுடன் இணைந்து நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நல்ல பாடகராகவும் உள்ள வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பத்தா என தொடங்கும் அந்த முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

 

https://twitter.com/LycaProductions/status/1592148176483782658?t=4YVKd95Nww4I7AYi3RuquA&s=08

அதன்படி படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். பாடலில் ஸ்டைலிசாக வடிவேலு நடனம் ஆடியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.