தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி

தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி யான  ஜாங்கிட், ‘குலசாமி’  எனும் திரைப்படம் மூலம் நடிகராக  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான ”குட்டிப்புலி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர்…

தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி யான  ஜாங்கிட், ‘குலசாமி’  எனும் திரைப்படம் மூலம் நடிகராக  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

சசிகுமார் நடிப்பில் வெளியான ”குட்டிப்புலி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் தற்போது  இயக்கி வரும் படம்தான் குலசாமி.  இப்படத்தில் கதாநயகனாக விமல்,  கதாநாயகியாக தன்யா ஹோப் மற்றும் வில்லனாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜனனி பாலு நடித்துள்ளார். சமீபத்தில் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். குலசாமி படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து திரையிடலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாதிரத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நடித்துள்ளார்.

ஏப்ரல் 21ம் தேதி அன்று குலசாமி படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் விமல்  மற்றும் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்டோரின்  புகைப்படங்களுடன் தியேட்டர்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

“போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நான்  நடித்துள்ள குலசாமி படம்  திரைக்கு வர உள்ளது. சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகள்,  அவர்களை காவல்துறை எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாக வைத்து  உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம்  இயக்கப்பட்டுள்ளது.” என தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி  ஜாங்கிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டின் கதையைத்தான்  கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில்  படமாக வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.