ஓமலூர் அருகே , லோக்கூர் வனப்பகுதியில் தீ பரவியதால் அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்காவை சேர்ந்த , டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு சொந்தமாக லோக்கூர் வனகண்டா மலை , டேனிஸ் பேட்டை வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் புற்கள், செடி , கொடிகள் அனைத்தும் காய்ந்து காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து லோக்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, லோக்கூரியிலிருந்து டேனிஸ்பேட்டை இடையே உள்ள வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக, காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் , காடையாம்பட்டி தீயணைப்பு நிலையை அலுவலர் ராஜசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்க முற்பட்டனர்.
மேலும் , தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் காரணமாக , வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள் உள்ளிட்ட பல வகை செடிகள் எரிந்து சேதமானது. மேலும், வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
–கு.பாலமுருகன்