போதை மாத்திரைகளை விற்பனைச் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்பொழுது
அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
இதில் அந்த மூவரும் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் நைட்ரவிட் என்ற உடல்வலி மாத்திரைகள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து தண்டையார்பேட்டை காவல்துறையினர் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் மனோஜ்(21), சையத் யாசீன் (21) மற்றும் தருண் (19) ஆகிய மூவரும் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
வட சென்னை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய இந்த மூன்று பேரும் வந்துள்ளனர். மேலும் போதை மாத்திரைகளை இவர்களுக்கு விற்பனை செய்த பெரம்பூர் மருந்து கடை உரிமையாளர் மோகன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சுமார் 2225 போதைப் மாத்திரைகளும் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனங்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நால்வரையும் தண்டையார்பேட்டை போலிசார் சிறையில் அடைத்தனர். மேலும் போதை மாத்திரை விற்பனையில் தொடர்புடைய ஆரிப் என்ற நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
-கோ. சிவசங்கரன்.
தண்டையார்பேட்டை அருகே போதை மாத்திரைகள் விற்பனை- கல்லூரி மாணவர்கள் உட்பட 4பேர் கைது
போதை மாத்திரைகளை விற்பனைச் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.…






