கரூரில் ஜே.சி.ஐ. டைமண்ட் குயின்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தையொட்டி 5 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கரூரில் ஜேசிஐ கரூர் டைமண்ட் குயின்ஸ் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி 5 கிலோமீட்டர் தொலைவுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர் திடலில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி துவங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டியில் கலந்து கொண்டவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர்
தொலைவைக் கடந்து மீண்டும் திருவள்ளுவர் திடலை அடைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினார். இந்த மராத்தான் போட்டியில் கரூர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா