திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அணைகள் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் 48…

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அணைகள் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43.42 அடியாக உயர்ந்தது.

இதனால், இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1292 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்து வருகிறது. இதுபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 ஆகிய இரண்டு அணையில் இருந்து 1028 கன அடி உபரிநீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி உபரிநீர் என மொத்தம் 3100 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், கோதையாரில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது இங்கு வரும் தண்ணீர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆர்பரித்து கொட்டுவதோடு கல் மண்டபம் மற்றும் நீச்சல் குழத்தையும் மூழ்கடித்து செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.