கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த பின்னரும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில்…

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த பின்னரும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழை காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, சேலம் ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.