தமிழில் ரசிகர்களுடன் நல்ல வரவேற்பை பெற்ற ’அருவி’ திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம், ’அருவி’. இதில் அதிதி பாலன் ஒரு எய்ட்ஸ் நோயாளியாக நடித்திருப்பார். அதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக திரையில் தோன்றியிருப்பார். இது ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்தப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘ஷூல்’, ’தம்’ உட்பட சில படங்களை இயக்கிய நிவாஸ், இந்தி ரீமேக்கை இயக்குகிறார். அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அதிதி பாலன் நடித்த கேரக்டரில், ஃபாத்திமா சனா ஷேக் நடிக்கிறார்.







