வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க கூடாது; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. வைகை அணை அதன் முழு கொள்ளவையும் எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,…

மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது.

வைகை அணை அதன் முழு கொள்ளவையும் எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதன்காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை சிம்மக்கல் அருகே உள்ள தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.