தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது.
2வது நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மூன்றாம் நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுலும், ரஹானேவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 123 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி நெகிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 32 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.








