முக்கியச் செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்க தொடர், இந்திய அணி இன்று அறிவிப்பு: ரஹானேவுக்கு இடம் உண்டா?

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், 4 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. தென்னாப்பிரிக்கா வில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, இந்த தொடர் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது ஒரு வாரம் தாமதமாக இந்தத் தொடர் தொடங்க இருக்கிறது.

இதற்கான இந்திய அணி வரும் 16- ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்கிறது. மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டும் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கவுள்ளது. டி-20 தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26- ஆம் தேதியும், 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ் பர்க்கில் ஜனவரி 3- ஆம் தேதியும், 3-வது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 11- ஆம் தேதியும் தொடங்குகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகள், ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி போட்டி 23 -ஆம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க இருக்கிறது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் துணை கேப்டன் ரஹானே, அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. மோசமான ஃபார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

எம்பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Saravana Kumar

நாளை யூரோ கோப்பை அரையிறுதி : ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதல்

Vandhana

காவலரை காவு வாங்கிய கட்டடம்!

Saravana Kumar