மாநாடு திரைப்படத்தின் ‘ஒரு நாடு என்றாலும் பல நாடுகளின் கூடு’என்ற பாடல் யூ- டியூப்பில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி வெளியானது. டைம் லூப் வகையில் எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் இடம்பெறாத அதேசமயம் படத்திற்கு முக்கியமான பட்டைய கிளப்பிய BGM உள்ள Voice of Unity ‘ஒரு நாடு என்றாலும் பல நாடுகளின் கூடு, சிறுபான்மைகள் இல்லாத பெரும்பான்மைகள் இங்கேது’ என்ற பாடல் தற்போது 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
யுவன்சங்கர் ராஜா இசையில் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு மற்றும் அறிவும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் யுவனின் யூ- டியூப் பக்கமான u1 recordsல் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
-மா.நிருபன் சக்கரவர்த்தி







