GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 அதிகரித்து ரூ.2,75,000க்கும், கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.