கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஹர்பஜன் சிங் அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த…

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்களும் ஒரு நாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், அதன்பின் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது 41 வயதாகும் ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

https://twitter.com/harbhajan_singh/status/1474302128311062533

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 23 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் பயணம் நிறைவு பெற்றதாகவும், கிரிக்கெட் வாழ்வில் தமக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.