முதலாவது ஒருநாள் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் அணிக்கு திரும்பி இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்ததில் 7 போட்டி கைவிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.