காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, சென்னையில் இருந்து சுமார் 740 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனபடி, தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.