தமிழ்நாட்டில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. எங்கெல்லாம் தெரியுமா….? – வானிலை ஆய்வு மையம் தகவல்….!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மார்ச் 12 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ் நாடு,  புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை விவரம் : 
 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
• கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை.
• அதிகபட்ச வெப்பநிலை :   மதுரை விமான நிலையம்:  37.0 ° செல்சியஸ்
• குறைந்தபட்ச வெப்பநிலை:    சமவெளிப்பகுதிகளில்: தர்மபுரி மற்றும் திருத்தணி:  21.0° செல்சியஸ்
    • மலைப்பகுதிகளில்: குன்னூர்: 7.9° செல்சியஸ்
  அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
12-03-2026 முதல் 16-03-2026 வரை: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-03-2026 மற்றும் 18-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.