ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஈரானில் உள்ள வட கொரிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதாகவும் அதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் கண்டனம் தெரிவித்ததாகவும் “இஸ்ரேல் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளது” என்று அவர் கூறியதாவும் இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
இந்த செய்தியானது சர்தேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அபாயகரமான ஆயுதங்களை அடிக்கடி சோதனை செய்து பார்க்கும் வட கொரியா, ஈரான் – இஸ்ரேல் போரில் தலையிட்டால் அது உலக போராக விரிவடைவது மட்டுமல்லாமல் பெரும் அழிவுகளுக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து எக்ஸின் க்ரோக் உள்ளிட்ட கருவிகள் மூலம் உண்மை சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வடகொரிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதாக கூறப்படும் தகவல்கள் பற்றில் வடகொரியா தரப்பிலோ அல்லது ஈரான் தரப்பிலோ எந்த விதமான அதிகார பூர்வ தகவல்களும் இல்லை. ஆகையால் இந்த செய்தியானது போர் காலங்களில் கட்டவிழ்த்து விடப்படும் வதந்திகள் என்று கூறப்படுகிறது.







