முக்கியச் செய்திகள் தமிழகம் வாகனம்

இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பல்லடத்தில் தனியார் பேருந்து ஒன்று, சிஎன்ஜி எனும் இயற்கை எரிவாயுவில் இயங்கி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான சிஎன்ஜி டேங்க் உள்ளது. மேலும், புகை மாசுவை குறைக்கும் வகையில் முற்றிலும் புகையே வெளியேறாத வகையில், இந்த பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோகுல்நாத் கூறுகையில், 90 கிலோ சிஎன்ஜி கேஸ் என்பது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது என்றும், டீசலுக்கும் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் லிட்டர் அளவிலான விலையில் நாற்பது ரூபாய் வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எரிவாயு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் அதே நேரத்தில், இயற்கையை பாதிக்காமல் இருக்கும் இதுபோன்ற பேருந்துகள் தயாரிப்பதில் அரசு கவனம் செலுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் விலையை குறைப்பதில் யார் முனைப்பு காட்டுகிறார்கள் – மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

மேகதாது அணை விவகாரம் கடந்து வந்த பாதை

Jeba Arul Robinson

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் பலி

Halley Karthik