இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு இன்று தனது 101-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சுதந்திரப் போராட்ட வீரரும், தொழிலாளர் உரிமைகளுக்காக அயராது பாடுபட்டவரும், நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்பவருமான திரு நல்லகண்ணு அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், தன்னலமற்ற சேவையின் அடையாளமுமான அவருக்கு நல்ல ஆரோக்கியமும், நீண்ட, நிறைவான வாழ்வும் அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







