ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

த்ரில்லர் ரசிகர்களை கவர வரும் விதமாக ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படத்தை தயாரிக்கும் ஹோம்பலே நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. மலையாள நடிகர்…

த்ரில்லர் ரசிகர்களை கவர வரும் விதமாக ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படத்தை தயாரிக்கும் ஹோம்பலே நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

மலையாள நடிகர் ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்திருக்கும் படம் ‘தூமம்’. இந்த படத்தை லூசியா, யூடர்ன் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கி பலரது கவனத்தை பெற்ற கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கேஜிஎஃப் , காந்தாரா போன்ற இந்திய அளவில் பிரபலமான மெகா ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு பூர்ணாசந்திரா தேஜஸ்வி இசையமைக்க, ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ள சூழலில், இந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது இப்படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . அந்த போஸ்டரில் ஃபஹத் பாசிலின் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டது போலவும், அவரது பின்புறம் அபர்ணா பாலமுரளி உட்பட படத்தில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும், ஒரு பிளாக் அன்ட் வொயிட் டோனில் சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கே உரிய காட்சி மொழியோடு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்ரம், புஷ்பா போன்ற படங்களின் வாயிலாக இந்திய அளவிலும், தமிழிலும் மிகுந்த கவனம் பெற்றுள்ள ஃபஹத் பாசில். இந்த படத்திலும் தன் நடிப்பின் மூலம் நிச்சயம் நம்மை மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்
ஏற்கனவே கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களின் மூலம் நம்மை மிரள வைத்த ஹோம்பலே நிறுவனம் இப்படத்தை தயாரித்திருப்பதால், இப்படம் கூடுதல் கவனமும் பெற்றுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.