ஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!

நாமக்கல்லை அடுத்த புதுக்கோட்டை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை கனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஒசக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சோப கிருது…

நாமக்கல்லை அடுத்த புதுக்கோட்டை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை கனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஒசக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சோப கிருது வருடம் சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு சித்திரை கனி விழாவை முன்னிட்டு சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. சித்திரை
அன்று திருக்கோவில் வரும் பக்த கோடிகள் அனைவருக்கும் பிரசாதமாக கனிகள்
வழங்கப்படும். மேலும் ரூபாய் இரண்டு ,அம்மன் முன்வைத்து அபிஷேகம் செய்த காசும் வழங்கப்பட்டது. இந்தக் காணிக்கையை பக்தர்கள் தங்கள் வீடுகளில்
வைத்து குடும்ப செல்வம் செழிப்போடு வளரும் என்பது ஐதீகமாகும்.

–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.