இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியும். இதனால் தமிழகத்தில் முதன் முதலாக நடைபெறும் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட்டு, நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டியை ஒத்தி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்த பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடத்தப்பட்டு ,பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் நாளைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் இரட்டை பாரிக்காடுகள் அமைக்கும் பணி, மேடை சரி செய்யும் பணி, வாடிவாசலை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு சமப்படுத்தி மஞ்சு அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது…நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.