முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

“சல்மான் கானுடனான எட்டு ஆண்டு வாழ்க்கை மிக மோசமானது”: மனம் திறந்த நடிகை சோமி அலி

முன்னாள் காதலரும் , நடிகருமான சல்மான் கானின் உடல் ரீதியான துஷ்பிரயோகம் குறித்து அடிக்கடி பேசி வந்த நடிகையும், சமூக ஆர்வலருமான சோமி அலி தற்போது மீண்டும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சல்மான் கானுடன் கழித்த எட்டு வருடங்களும் எனது முழு வாழ்க்கையிலும் மோசமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நடிகை சோமி அலி, தற்போது சமூக ஆர்வலராகவும், சல்மான் கானின் முன்னாள் காதலியாகவும் இருந்து வருகிறார். பாகிஸ்தானிய நடிகையான இவர் அண்டோலன், மாஃபியா, கிருஷ்ணன் அவதார், அந்த் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான் கானும் 1991ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களது காதல் வாழ்க்கையில் இருந்து பிரிந்து சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகள், மனகசப்புகள் குறித்து அவ்வப்போது பேசுவது அவரது வழக்கம் ஆகும் . அதன்படி சல்மான் கானுடனான தனது 8 ஆண்டுகள் காதல் வாழ்க்கை குறித்து அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் சோமி அலி கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் பெண்களை அடிப்பவர், அவர் என்னை மட்டுமல்ல பல பெண்களையும் அடித்துள்ளார். அவர் ஒரு மிகப்பெரும் சாடிஸ்ட் என்றெல்லாம் கூறி பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

நடிகை சோமி அலியின் இந்த பதிவு அன்று பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த பதிவை உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அவரது பதிவுகளை நீக்கியது குறித்து அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சோமி அலி ,சல்மான் மீது ஏற்பட்ட கோபத்தால் அப்படி எழுதினேன். பிறகு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, எனது செயல் பிடிக்காததால் அதை நீக்கினேன் என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சோமி அலி, சல்மான் கானால் தான் அனுபவித்த உடல் ரீதியிலான வன்முறை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “பல ஆண்டுகளாக சல்மான் கான் என்னை தனது காதலியாக பொது வெளியில் அறிவிக்கவில்லை.ஒரு கட்டத்தில் என்னை காதலியாக அறிவித்த பிறகு , தனது நண்பர்களின் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துவார், இடைவிடாது திட்டுவார்.

 

View this post on Instagram

 

A post shared by Somy Ali (@realsomyali)

 

இது தவிர சல்மான் நான் ஒரு ஆண், ஆண்களால் மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும் என்று கூறி என்னை பலமுறை அடித்துள்ளார். இது என்னை மிகவும் வேதனை படுத்தியது. அதனாலயே அவர் என்னை நடத்துவதைக் கருத்தில் கொண்டு அவரை விட்டு பிரிந்துவிட முடி செய்ததாகவும், அவருடன் கழித்த எட்டு வருடங்கள் எனது முழு வாழ்க்கையிலும் மிக மோசமான ஆண்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பார்வையாளர்கள் சிலர் “சல்மான் கானுடன் நீங்கள் அனுபவித்ததைப் பற்றி வெளியே வந்து பேச உங்களுக்கு இவ்வளவு நேரம் பிடித்தா? என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சோமி அலி,

“இது எந்த வகையிலும் பிரேக்கிங் நியூஸ் கிடையாது. 90 களின் முற்பகுதியில் இருந்து 1999 வரை ஏதேனும் ஒரு ஒரு திரைப்பட இதழில் சோமி, சல்மானால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைப் பற்றி கட்டுரையாக படித்திருப்பீர்கள் என்று அவர் கூறினார்.

மேலும் சோமி அலிக்குப் பிறகு, சல்மான் கான் சங்கீதா பிஜ்லானி, கத்ரீனா கைஃப் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டார்.தற்போது சல்மான் கான் மாடல் அழகி இயுலியா வந்தூருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

Web Editor

ஜெகதீப் தன்கர் கடந்து வந்த அரசியல் பாதை!

Web Editor

திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!

Halley Karthik