ஒலிம்பிக் போட்டி தமிழகம் செய்திகள்

நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீச்சு விவகாரம்: முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தொடர்பான விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் , கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்தது. ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் மதுரை விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வாகனத்தில் வந்த பொழுது, கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கைமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மூவரும் தனித்தனியே முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரை வரவேற்கவும், ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அங்கு சென்றிருந்தோம். நடைபெற்ற இந்த செயலில் நாங்கள் ஈடுபடவில்லை, அதோடு எங்கும் தலைமறைவும் ஆகவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல எதிர்பாராதவிதமாகவே நடந்தது.

இது தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் கடந்த 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு அன்றே ஜாமீனில் வெளிவந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணிக்கம், நடராஜன் மற்றும் சுதாநாகுலு ஆகியோர் கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களிடம் பிணை பெறப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், எங்களையும் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கிற்கு தேவையான பிணையும் வழங்கவும் தயாராக உள்ளோம். ஆகவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், “போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரர்களின் உரிமை விளம்பர நோக்கத்தில் உள்ளது. முன் ஜாமீன் கோரிய மூவர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும் அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் அன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்தும், நிகழ்வில் நடத்த இந்த சம்பவத்தை அரசு சட்ட விரோதமானதாக, ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகவே உள்ளது. ஆகவே மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில்,இது திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. எதிர்பாராதவிதமாகவே நடந்தது” என தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram