‘எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வலிமையை மட்டும் இழந்து விடாதீர்கள்’ – ஆளுநர்

இந்தியாவும், அமெரிக்காவும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில்,…

இந்தியாவும், அமெரிக்காவும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார

வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 8,168 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும், பொறியியல் துறையில் சிறப்பாக்கச் செயல்பட்ட 10 மாணவ மாணவிகளுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், அமெரிக்கத் தேசிய அறிவியல் அமைப்பு தலைவர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் ஸ்ரீ வாரி சந்திரசேகர் உள்ளிடோர் பங்கேற்றார்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவும், அமெரிக்காவும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சுவாமி விவேகானந்தா கண்ட கனவு வலிமையான இந்தியா அதை நாம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார். மேலும், இளைஞர்கள் ஒன்றை மட்டும் பின் தொடர வேண்டும் சுவாமி விவேகானந்தா சொன்னது போல ‘எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே தான் நீ மாறுவாய்’ எனவே, அந்த பொன்மொழியை இளைஞர்கள் பின் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.

https://twitter.com/rajbhavan_tn/status/1560208787679907840

அண்மைச் செய்தி: ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவு; தலைவர்கள் இரங்கல்’

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா 2047-இல் நூறாவது சுதந்திரம் கொண்டாடப் போகிறது. எனவே, இப்போது உள்ள இளைஞர்கள் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது உங்களுடைய கடமை எனக் கூறினார். மேலும், உலக நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி மற்றும் அனைத்து துறைகளுக்கும் அது பொருந்தும். உதாரணமாக 150 நாடுகளுக்கு கொரோனா ஊசிகளை நாம் கொடுத்துள்ளோம். பத்து வருடங்களுக்கு முன்பு வெறும் 400 தொடக்கத் தொழில் முனைவோர்கள் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது 80 ஆயிரம் தொடக்கத் தொழில் முனைவோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பள்ளி மாணவர்கள் 750 குட்டி சேட்டிலைட் உருவாக்கியுள்ளனர் எனக் கூறினார்.

மேலும், இளைஞர்கள் யோசிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது உள்ள உலகத்திற்கு வித்தியாசமாகத் தான் தேவைப்படுகிறது எனத் தெரிவித்த அவர், நீங்கள் தோற்றால் அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வலிமையை மட்டும் இழந்து விடாதீர்கள் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.