சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!

சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்திற்கு காசிமேடு துறைமுகத்தை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை துறைமுகமானது ராயபுரம் மீன்பிடித் துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது.…

சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்திற்கு காசிமேடு துறைமுகத்தை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகமானது ராயபுரம் மீன்பிடித் துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது. மீன்பிடி துறைமுகத்தின் தற்போதைய வடிவம் 1983-85 ஆம் ஆண்டில் சென்னை துறைமுக அறக்கட்டளை மூலம் ரூ 13.34 கோடியில் அமைக்கப்பட்டது. இதில், 977 இயந்திர மீன்பிடி படகுகள், 1,370 ஃபைபர் படகுகள் கொண்டதாகத் துறைமுகமாக உள்ளது. இங்கு மீன்பிடி தொடர்பான பணி, வணிகங்களுக்காக நாள்தோறும் 30,000 பேர் வந்துசெல்கின்றனர்.

அண்மைச் செய்தி: ‘‘எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வலிமையை மட்டும் இழந்து விடாதீர்கள்’ – இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய தமிழ்நாடு ஆளுநர்

இந்நிலையில், சர்வதேச தரநிலைகளின்படி மேலாண்மை அமைப்பு மூலம் மீன்பிடி துறைமுகத்தைத் தூய்மையான, மாசு இல்லாத மற்றும் அழகியல் தோற்றத்துடன் மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும், ஏற்றுமதி அளவை அதிகரிக்கும் வகையில், அனைத்து வசதிகளும் புதுப்பிக்கப்படவுள்ளது.

  • வணிக வளாகத்துடன் கூடிய நிர்வாகம் மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு
  • சுத்தம் செய்தல், பேக்கேஜிங் மற்றும் குளிர்பதன கிடங்கு வசதி
  • படகு பழுதுபார்க்கும் உதிரிப் பாகங்கள் வளாகம்
  • மீன் கையாளும் பகுதி
  • இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம்
  • கட்டுப்பாடுகளுடன் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் வசதிகள்
  • சுகாதார வளாகம்
  • மழைநீர் வடிகால், இருவழி புறச் சாலை, எனச் சர்வதேச தரத்தில் சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மீன்பிடி துறைமுகம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.