விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது.
விருதுநகர் பகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் உமாபதி.இவர் கூட்டு பட்டா தருவதற்கு ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உமாபதி , இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட போது , தன்னுடன் கைது செய்யப்பட்ட மற்றொருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனக்கும் ஜாமின் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு தரப்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் , கூட்டு பட்டா பெறுவதற்காக ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது மனுதாரர் நேரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.எனவே ஜாமின் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்கும் நோக்குடன் செயல்படக்கூடாது. ஜாமினில் இருக்கும் நாட்களில் வேறு தவறுகளில் ஈடுபடக்கூடாது. போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் உமாபதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக தவறினால் அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.