மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததுபடி தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் பரிந்துரை, முழு மதுவிலக்குக்கு நல்ல…

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததுபடி தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் பரிந்துரை, முழு மதுவிலக்குக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மதுவால் சமூகம் சீரழிவது குறித்த நீதிபதிகளின் கவலையும் அக்கறையும் பாராட்டத்தக்கவை என்று கூறியுள்ள ராமதாஸ், அதே அக்கறை ஆட்சியாளர்களுக்கும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் பரிந்துரைப்படி மதுவிற்பனையை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரமாக குறைத்தால் மதுவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதுடன் இரவு நேர விபத்துக்களும் குறையும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், அதற்கு முன்னோட்டமாக உயர்நீதிமன்ற பரிந்துரைப்படி மதுவிற்பனை நேரத்தை ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.