புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

ஓமலூர் பகுதியில் புடலங்காய்  விலை குறைந்து இருபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் குப்பூர்,  தும்பிபாடி,  மூக்கனூர் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட …

ஓமலூர் பகுதியில் புடலங்காய்  விலை குறைந்து இருபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் குப்பூர்,  தும்பிபாடி,  மூக்கனூர் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஏக்கர்களில் விவசாயிகள் புடலங்காய்  பயிரிட்டுள்ளனர்.  ஆனால் தற்போது  புடலங்காய் விலை குறைந்து, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆவதால்  ஓமலூர் பகுதியில்  புடலங்காய்  பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புடலங்காய் குறுகிய கால பயிர் என்பதாலும் அன்றாடும்  வீட்டுக்கு தேவையான காய்கறிகளில் ஒன்று என்பதாலும்  ஓமலூர் பகுதியில் அதிக அளவில் புடலங்காய் பயரிட்டுள்ளனர். புடலங்காய் விதை நடுவு  செய்து 45 நாட்களில்  அறுவடைக்கு தயாராவதோடு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் அறுவடை செய்யலாம். இந்நிலையில், பாய்ச்சுவதொடு, உரம் எரு உள்ளிட்டவைகள் அதிக அளவு கொடுத்து வளர்த்ததால் நன்கு விளைந்து தற்போது  கிலோ வெறும் 20 ரூபாய்க்கு  விற்பனை ஆவதாகவும் கூறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சுமார் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானால்  விவசாயிகளுக்கு லாபம்  தரும் எனவும்  விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாவும்  தெரிவித்தனர்.  தற்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனையாகி வரும் நிலையில்,  புடலங்காய் குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் புடலங்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.