வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின்…

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக்குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.