வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் – திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மதிவேந்தன்…

திமுக ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மதிவேந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டார். ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பரப்புரையில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும், கரும்புக்கு குறைந்த பட்ச விலை உயர்த்தப்படும் என்றும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை சட்டங்கள், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சிவா உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.