முக்கியச் செய்திகள் தமிழகம்

குடும்பம் தான் முதலில்; பிறகு தான் மற்றவை -ஆலோசனை கூட்டத்தில் விஜய் அறிவுரை

குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் பிறகு தான் மற்றவை எனவும் அவர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் தனது
மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300க்கும்
மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நடிகர் விஜயுடன் புகைப்படங்கள்
எடுத்துக் கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


நடிகர் விஜய் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்
முறையாக தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அவரிடம் ஆலோசனை மேற்கொண்டு
புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இன்று காலை முதல் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் பனையூரில் உள்ள விஜய் மக்கள்
இயக்க அலுவலகத்திற்கு வருகை தந்தனர். விஜய் மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட
மாவட்ட நிர்வாகிகள் காலை முதலே நடிகர் விஜயை பார்ப்பதாக காத்திருந்தனர்.
அவர்களுக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார். கருப்பு நிற உடை அணிந்து வந்த நடிகர் விஜய்யை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவர்கள் செய்து வரும் நலத்திட்ட உதவிகளையும் கேட்டு அறிந்தார். குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் பிறகு தான் மற்றவை எனவும் அவர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Web Editor

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று ஓய்வு

EZHILARASAN D

டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

Gayathri Venkatesan