சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் கழிவறை காகிதம் முதல் காபி பொடிவரை பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படவேண்டிய பொருட்கள் மாட்டிக்கொண்டு உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது.
சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தற்போது வரை கரைதட்டி நகர முடியாமல் 2,24,000 டன் சரக்கு பொருட்களைக் கொண்ட ‘எவர் கிவன்’ கப்பல் நின்றுகொண்டிருக்கிறது. உலகளவில் 12 சதவிகிதமான வர்த்தகங்கள் இந்த சூயஸ் கால்வாய் மூலம் நடந்து வருகிறது.

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கி இருப்பதால் ஒரு மணிநேரத்துக்கு ரூ.29,000 கோடி வர்த்தகர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இடையே வர்த்தக பயணத்தை எளிதாக்க சூயஸ் கால்வாயில் உதவியாக உள்ளது. தற்போது இந்த கால்வாயை முழுமையாக ‘எவர் கிவன்’ கப்பல் மறித்து நின்றுள்ளதால் பின் வரும் அனைத்து வர்த்தக மற்றும் பல வகையான சொகுசு, சுற்றுலா கப்பல்களும் வேறு வழி இல்லாமல் நின்றுவருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பயண தூரத்தைக் குறைப்பதிலும் பயணத்தின் போது ஏற்படும் எரி பொருட்களை மிச்சம் செய்வதிலும் சூயஸ் கால்வாய் பெரும் பங்காற்றிவருகிறது. சிக்கிக்கொண்ட கப்பலை நகர்த்த சில வாரங்கள் ஆகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.







