பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், தடுப்பூசி செலுத்துவது என கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் 2,089 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,77,279 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,157 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,241 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,52,463 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,659 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 775 பேருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 186 பேருக்கும், கோவையில் 185 பேருக்கும், கோவையில் 110 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.







