தமிழகத்தில் வருகின்ற அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 5 முனைப் போட்டி நிலவும் இத்தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதி முழுவதும் தவெக வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். இந்த நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“நான் ஓட்டு கேட்டு வரவில்லை நியாயம் கேட்டு வந்திருக்கேன். ஒருத்தரிடம் பெட்டி பெட்டியாக பணத்தை திணித்ததால், மக்களாகிய உங்களிடம் இந்த இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள. நீங்கள் கட்டிய வரிப்பணத்தில் தான் இந்த இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. நீங்கள் போட்ட ஓட்டு-ஐ செல்லாத ஓட்டாக ஆக்கிவிட்டார்கள். அந்த துரோகிக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
118 தொகுதிகளில் வெற்றிபெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ஒரு முதலமைச்சர் இப்போது இருக்கிறார். அவரது சுயநலத்திற்க்காக மக்களின் தீர்ப்பை விலைக்கு வாங்க வரவழைக்கப்பட்ட தேர்தல்தான் இந்த இடைத்தேர்தல். புதுயதாக ஆட்சிக்கு வந்திருக்கார், எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வார் என்று நினைத்தால், அவர் அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிக்கொண்டு இருக்காரு; இதுதான் மாற்றமா?.
ஜனநாயகன் என்றொரு ஒரு படத்தில் கதாநாயகனா நடித்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தின் வில்லனாக குதிரை பேரம் பேசி இந்த இடைத்தேர்தலை வரவைத்திருக்கிறார். பல இடங்களுக்கு ஷோபாவை அனுப்பி, அதிமுகவுடைய பாதி எம்.எல்.ஏ.க்களை வாங்குனார். மேலும் அம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து, இந்த இடைத்தேர்தலை வரவைத்திருக்கிறார். மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் விஜய்க்கு, தாராபுரம் மக்களாகிய நீங்கள் கொடுக்கப் போகிற அடி, மறக்க முடியாத மரண அடியா இருக்க வேண்டும்.
மின்சாரம் இல்லை, பால் கிடைக்கவில்லை, ரேஷன் கடையில் பாமாயில் கிடைக்காமல் மக்கள் திண்டாடிக்கொண்டிருகிறார்கள். ஆனால் அமைச்சர்கள் இடைத்தேர்தல் நாக்கும் தொகுதிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசாங்கம் செயல்படாமல் இருக்கிறது. இதெல்லாம் தெரிந்த நீங்கள் துரோகத்தின் உருவமாக வருகிற ஆளுங்கட்சி வேட்பாளருக்கு, தரமான வரவேற்பை கொடுத்து விரட்டிக்கொண்டிருகிறீர்கள்.
ஆட்சியின் முதல் ஆறு மாதத்தை தேனிலவு காலம் என்றுசொல்வார்கள். ஆனால் நான்கே மாதத்தில் இந்த ஆட்சி நாறிப் போய்விட்டது. தவெகவுக்கு ஓட்டு போடாதவர்கள் மட்டுமில்லை, ஓட்டு போட்டவர்களே இப்போது புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
உள்ளூரில் பேர் ரிப்பேர் ஆனதும், கோடிக்கணக்குல காசு கொடுத்து, வடமாநிலங்கள்ல தள்பதி தள்பதின்னு பொய் செய்திகளை பரப்ப ஆரம்பிச்சுட்டாங்க; டிசைன் டிசைனாக பொய் செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.




