ஜப்பானின் ஆய்ச்சி – நகோயா மாகாணத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில், மகளிர் ஹாக்கியின் இறுதிப் போட்டி, கிஃபு பிரிஃபெக்சுரல் கிரீன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவுடன் இந்திய அணி மோதியது; ஆட்டத்தின் முதல் பாதியில் லால்ரெம்சியாமி கோல் அடித்ததன் மூலம் இந்தியா முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடந்த 2-வது பாதியில் சீனா அடித்து ஆடத் தொடங்கியது. எதிர்தரப்பில் இந்தியாவும் கடும் சவாலாக இருந்து சீனாவின் கோல் முயற்சிகளை தடுத்தது. இறுதியாக 1 – 0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்த நிலையில், சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்-க்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




