“பாஜக என்றால் அவ்வளவு பயமா CM சார்?” – மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்து பேச ஏன் சார் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,சினிமாவில் நடிப்பதை நிறுத்திட்டு, முதலமைச்சர் இப்போது மக்கள் முன்னால் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது பிரசாரத்தில்  கூட இருக்குப்பவர்களையெல்லாம் ஆர்ட்டிஸ்ட்டாக மாற்றிக்கொண்டு இருக்கிறார். தாராபுரத்துல அந்த டிராமாவையெல்லாம் பார்த்தோம். தாராபுரத்தில் நாடகம் பார்த்தோம்; நீங்க அழுவாதீர்கள்…உங்களுக்கு வாக்களித்த நாங்கள்தான் அழ வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள்.

பிரசார மேடையில் மைக் கிடைத்தால், மனப்பாடம் செய்ததையே கத்துகிறார். முதல்வர் பேசுவதே கிடையாது, சட்டமன்றமாக இருந்தாலும், வீதியாக இருந்தாலும், எல்லா இடத்திலும் கத்துகிறார். ஆனா மீடியா மைக்-ஐ பார்த்தாலே அவருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது.

மேட்டூரில் அவரை சந்தித்த பாட்டியும், காலை உணவு பரிமாறிய அந்த மாணவியும் கூட தைரியமா ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்கள். ஆனால் முதல்வர் மீடியாவைப் பார்த்து பயப்படுகிரார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்றீங்க? என்று நான் கேட்கவில்லை, உங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சியினரே கேட்கிறார்கள். என்ன சார் பயம்? இந்தியா முழுக்க அனைத்து தலைவர்களும் பேசிக்கொண்டு இருக்குற விஷயத்தில் கூட உங்களால் வாயைத் திறக்க முடியவில்லை என்றால், என்ன காரணம் CM சார்?, பாஜக என்றால் அவ்வளவு பயமா CM சார்?

பிரசாரத்தில் முதல்வரே ஒரு உண்மையை சொல்லிவிட்டார். பாஜகவோட கிளைதான் தவெகன்னு ஒப்புக்கொண்டார். அந்த உண்மையை அவரே சொன்னதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.