யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் வெற்றி பெற்றன.
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டியில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இரண்டாம் பாதியில் குரோஷியா அணி வீரர்கள் லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க அந்த அணி 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ’டி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்த குரோஷியா, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லண்டனில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, செக் குடியரசு அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடித்த நிலையில், செக் குடியரசு அணியின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்த அந்த அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
யூரோ கோப்பை தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ’இ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்வீடன், போலந்து அணிகள் மோதுகின்றன.
செவில் நகரில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்லோவேகியா அணியை எதிர்கொள்கிறது. இரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ’F’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி, ஹங்கேரி அணிகள் மோதுகின்றன.
புத்தாபெஸ்ட் நகரில் நடைபெறும் மற்றொரு போட்டியில், முன்னாள் சாம்பியன்கள் பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.